எனக்கு ஒன்றுமே தெரியாதா.. நான் என்ன முட்டாளா.. கோவை சரளா சரவெடி

கமல் கட்சியில் தாம் நேர்காணல் நடத்தியதை அவமானமாகக் கருதியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய சி.கே.குமரவேல் தெரிவித்ததற்கு, நான் என்ன ஒன்றும் தெரியாதவளா? நான் என்ன முட்டாளா? என கோவை சரளா சரவெடியாக பதிலளித் துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர், நாகை மாவட்ட பொறுப்பாளராக இருந்த சி.கே.குமரவேல் நேற்று கட்சியிலிருந்து விலகினார்.வேட்பாளர் அறிவிப்பு வெளியிடும் முன்னரே கடலூர் தொகுதியில் தாம் போட்டியிடுவதாக குமரவேல் முகநூலில் பதிவிட்டதற்காக கட்சியில் விளக்கம் கேட்க, அதிருப்தியில் கட்சியிலிருந்து வெளியேறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் குமரவேல் பேசுகையில், கட்சிக்கு நேற்று வந்த கோவை சரளாவை வைத்தெல்லாம் நேர்காணல் நடத்துகிறார்கள். இதை என் மனைவியே காமெடி பண்ணினார் என்ற ரீதியில் கமல் கட்சியை குமரவேல் விமர்சித்திருந்தார்.

குமரவேலின் குற்றச்சாட்டுக்கு இன்று தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கோவை சரளா சரவெடியாக பதிலளித்துள்ளார். நான் கட்சிக்கு வந்து 2,3 நாட்கள் தான் ஆகிறது என்பது உண்மைதான். நானும் ஒரு வாக்காளன் என்ற உரிமையில் தான் கமல் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். அதே தகுதியில் தான் நேர்காணலிலும் பங்கேற்றேன். நேர்காணலில் நான் மட்டுமா? இருந்தேன். அரசியல் தெரியாத இன்னும் பல பேர் இருந்தனர். அவர்களை எல்லாம் விட்டு விட்டு நான் நேர்காணல் செய்தது அவமானம் என்று எதை வைத்து சொல்கிறார். என்னை முட்டாள் என்கிறாரா?எனக்கு ஒன்றுமே தெரியாது என்கிறாரா?அரசியலே தெரியாது என்கிறாரா?. எங்கே நேருக்கு நேர் என்னிடம் குமரவேல் கேட்கட்டும் அதற்கு தக்க பதில் அளிப்பேன் என்று சினிமாவில் வடிவேலுவை சரசரவென பொளந்து கட்டுவது போல் கோவை சரளா பதிலளித்துள்ளார்

More News >>