28 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக களத்தில் இறங்கும் தொகுதி இது...
தென்காசி தொகுதியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக போட்டியிடுகிறது.வெற்றிபெறும் முனைப்பில் தொண்டர்கள் தேர்தல் பணிகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டனர்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக...ஒரு சின்ன ரீகேப்..
தமிழகத்தில் கடந்த 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக சதன் திருமலையைக், காங்கிரஸ் சார்பாக நின்ற அருணாசலம் அதிக வாக்குகள் பெற்று தோற்கடித்தார். அதன்பிறகு, 1996 வரை தென்காசி காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தது. இதன் பின், நடந்த தேர்தல்களில் தென்காசி தொகுதியைத் தவிர்த்த திமுக, கூட்டணிக் கட்சிகளுக்கே தொகுதியை விட்டுக்கொடுத்து.
ஆனால், இந்த தேர்தலில் வெற்றி நமதே என்ற முழக்கத்துடன் களத்தில் இறங்கியுள்ள திமுக தென்காசியில் உதித்துள்ளது. இதனால், தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்கிக் கவனித்து வருகின்றனர்.
அதிமுகவை, வீழ்த்த ஆயத்தமாகியுள்ள திமுக 34 இடங்களை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தகவல் நேற்று வெளியானது.