அதிமுக பக்கம் தாவினார் நடிகர் கார்த்திக் - முதல் நாளே கல..கல.. கொழ.. கொழ.. காமெடி
நாடாளும் மக்கள் கட்சி என்று ஒரு கட்சி நடத்தி காமெடி செய்து வந்த நவரச நாயகன் நடிகர் கார்த்திக் அதிமுகவுக்கு தாவியுள்ளார். அவர் கொடுத்த முதல் பேட்டியிலேயே வழ.. வழ.. என புரியாமல் பேசி அனைவரையும் குழப்பமடையச் செய்து விட்டார்.
தேர்தல் காலத்தில் திடீரென பிரவேசிப்பது நடிகர் கார்த்திக்கின் வாடிக்கையாகிவிட்டது. கடந்த 2006-ல் ஜெயலலிதா இருந்த போது திடீரென நாடாளும் மக்கள் கட்சி என ஒரு கட்சியை ஆரம்பித்தார். சட்டசபைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஏகப்பட்ட குளறுபடி, காமெடிகளை செய்துவிட்டு திடீரென காணாமல் போனார். இதனால் வேட்பாளர்கள் தவியாய்த் தவித்த கதையும் நடந்தது.
சமீப காலமாக வெளியில் தலை காட்டாமலும், அரசியலில் ஈடுபடாமலும் இருந்து வந்த கார்த்திக் இன்று திடீரென அதிமுக தலைமை அலுவலகம் வந்து ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு சால்வை அணித்து அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வழக்கம் போல தன் பாணியில் வழவழா என குழப்பிப் பேசி இருப்பவர்களையும் குழப்பமடையச் செய்தது காமெடியாக இருந்தது.
அதிமுகவில் இணைந்து விட்டீர்களா? என்றதற்கு, கிட்டத்தட்ட அப்படித்தானு வைத்துக் கொள்ளுகளே... என்ற வர் இணைந்து விட்டதாகவும் வைத்துக் கொல்லலாம்.. ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாவும் வைத்துக் கொல்லலாம் என்று தமிழை கொலை பண்ணினார்.
தொடர்ந்து அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து பாராட்டிய கார்த்திக், அதிமுக என்னவெல்லாம் செய்யப் போகிறது என்ற தேர்தல் அற்க்கை அற்புதமா உள்ளது. நீங்களே படித்துப் பார்த்தால் தெரியும். இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடமை. ஒரு குறையும் மக்கள்க்கு வராது. மக்கள்க்கு அற்புதமா வாழ்க்கையை அமைத்து தருவது போன்ற தேர்தல் அற்க்கை என்றெல்லாம் ஏதோதோ குழப்பியது பெரும் காமெடியாக இருந்தது.
ஆக இந்தத் தேர்தலிலும் அதிமுக மேடைகளில் கலக்கல் காமெடி செய்ய வருகிறார் நவரச நாயகன் கார்த்திக்.