78 சதவீதம் அதிகரித்த அதிமுக எம்.பி.க்களின் சொத்து மதிப்பு - தகவல் அறிக்கை
By Suganya P
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எம்.பி.கள், தேர்தல் ஆணையத்திடம் பிராமணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். இதை கொண்டு, அவர்களின் சொத்து மதிப்புகளை ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
ஏடிஆர் எனும் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம் (2009, 2014ம் ஆண்டில்) இரு முறை மக்களவை எம்.பி-க்களாக தேர்வான 153 பேரின் சொத்துக் கணக்குகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட 21 கட்சிகளைச் சேர்ந்த 153 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு 2009ல் ரூ.5.50 கோடி இருந்துள்ளது. அதன்பிறகு, 2014ல் நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் இதே கட்சியைச் சேர்ந்த 153 எம்.பி.க்கள் தேர்வானார்கள். இவர்களின், சொத்து மதிப்பு சராசரியாக ரூ.13.32 கோடி அதிகரித்து இருந்துள்ளது.
2009 - 2014 ஆண்டு வரை 21 கட்சிகளைச் சேர்ந்த 153 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.7.81 கோடி அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இவர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 143 சதவீதம் உயர்ந்துள்ளது.
அறிக்கைப் பட்டியலில் முதல் 10 இடத்தில், பாஜக, காங்கிரஸ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எம்.பி.கள் இடம் பிடித்துள்ளனர்.
1.கரூர் எம்.பி. தம்பிதுரையின் சொத்து மதிப்பு 41 சதவீதம் அதிகரித்துள்ளது.
2.திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால் சொத்து மதிப்பு 1281 சதவீதம் அதிகரித்துள்ளது.
3 திருச்சி தொகுதி எம்.பி. குமாரின் சொத்து மதிப்பு 247 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவர்களின் சொத்து மதிப்பு கடந்த 2009ம் ஆண்டில் சராசரியாக ரூ.3 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டில் ரூ.5 கோடியாக (78 சதவீதம்) அதிகரித்தது.
அதோடு, அமேதி தொகுதியில் தேர்வான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 304 சதவீதம் அதிகரித்துள்ளது. ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்வான சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 573 சதவீதம் அதிகரித்துள்ளது.
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் சொத்து கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுக்குள் 139 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ரூ.7 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு ரூ.17 கோடியாக அதிகரித்துள்ளது.