எமன பொம்பள ரூபத்துல பார்பீங்க.. அதிர வைக்கும் அக்னி தேவி டிரெய்லர்

ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்த, பாபிசிம்ஹா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் அக்னிதேவி. இந்தப் படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

ஜான் பவுல் ராஜ், ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பாபிசிம்ஹாவுக்கு ஜோடியா ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். அரசியல் க்ரைம் த்ரில்லரா உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவை மிரட்டும் வில்லியாக நடித்திருக்கிறார் ரோஜா பட நாயகி மது. 1997க்குப் பிறகு தமிழ் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்த மது, கடந்த 2014ல் வெளியான துல்கர் சல்மான் நடித்த வாயை மூடி பேசவும் படத்தில் ஒரு ரோல் பண்ணியிருந்தார். அதன்பிறகு ஐந்து வருடம் கழித்து தற்பொழுது அக்னிதேவி படத்தில் வில்லி கெட்டப்பில் அதிரடித்துள்ளார்.

ஏற்கெனவே படத்தின் ஒரு டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் இரண்டாவது டிரெய்லர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகிற மார்ச் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

லின்க் - https://goo.gl/CVfdpb

More News >>