எனக்கும் காங்கிரக்கும் இடையே தான் போட்டி சுயேச்சைகளை பற்றி கவலையில்லை - தினகரன் பற்றி ஓ பிஎஸ் மகன்

தேனி தொகுதியில் காங்கிரஸ் தான் எனக்குப் போட்டியே தவிர மற்ற சுயேட்சைகளைப் பற்றி கவலை இல்லை என்று அத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் டிடிவி தினகரன் பற்றி விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் செல்வாக்கில் எளிதாக தேனி தொகுதி வேட்பாளராகி விட்டார் அவருடைய மகன் ரவீந்திரநாத் . கட்சியிலேயே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் கடும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தான் உண்மையான களநிலவரம்.

தேனி தொகுதியில் ரவீந்திரநாத்தை வீழ்த்தினால் தான் அம முகவுக்கு எதிர்காலம் என்ற ரீதியில் டிடிவி தினகரன் குறிவைத்து விட்டார். ஏற்கனவே அதிமுகவில் ஓ.பி.எஸ்.எதிர்ப்பாளர்கள் எல்லாம் தினகரன் பக்கம் அணி திரண்டுள்ளதால் தேனியில் அமமுக வலுவாகவே உள்ளதாக கூறப்படும் நிலையில், ரவீந்திரநாத்துக்கு செக் வைக்கும் வகையில் அமமுக வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளார் தினகரன் தங்க .தமிழ்செல்வனை நிறுத்துவதை விட தானே போட்டியிடலாம் என்ற எண்ணத்திலும் தினகரன் உள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில் இங்கு முதன்முதலில் எம்.பி.யாக தினகரன் போட்டியிட்ட போது தான் ஓபிஎஸ்சுக்கு அவர் மூலம் அரசியல் ஏறுமுகமே கிடைத்தது. தொகுதி முழுவதும் நல்ல அறிமுகமும், செல்வாக்கும் இருப்பதால் தினகரனே போட்டியிட்டாலும் ஆச்சர்யமில்லை என்ற பேச்சு தொகுதியில் பரவிக் கிடக்கிறது.

இந்நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக தேனி தொகுதிக்கு புறப்பட்ட ரவீந்திரநாத், தினகரனை ஒரு சுயேட்சையாக விமர்சித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத், தேனி தொகுதியில் எனக்கும் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் இடையே தான் போட்டி .மற்ற சுயேட்சை வேட்பாளர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்று தினகரன் தரப்பை சூடேற்றியுள்ளார்

More News >>