அட...தேர்தலுக்குப் பிறகு அதிமுக, திமுக, தேதிமுக-வின் நிலை என்னப்பா தேர்தல் ஓர் பார்வை

இந்த தேர்தலின் மூலம்தான் அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பதைத் தீர்மானிக்க முடியும். வெற்றியோ, தோல்வியோ பாஜக மற்றும் காங்கிரஸ்க்கு எவ்வித பாதிப்பும் இல்லை.ஆனால், பிற கட்சிகளின் நிலை எப்படி...இதோ ஓர் பார்வை...

ஜெயலலிதா உள்ளவரை, அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாகவே இல்லை. என்னதான், ஓபிஎஸ் மூன்று முறை முதல்வராக இருந்தாலும், அவரால் வாக்குகளைச் சேகரிக்க முடியுமா என்றால் சந்தேகம். ஜெ.,மறைவை அடுத்து அதிமுகவில் நடந்த களேபரத்தின் நடுவில் ஈபிஎஸ் முதல்வரானார்.

என்னதான், இரண்டு ஆண்டுகள் நிலையான ஆட்சியை அவர் நடத்தி வந்தாலும், கொங்கு மண்டலத்தைத் தாண்டி அவரது செலவாக இல்லை. அதோடு, தேர்தலில் ஏழு இடங்களையாவது கைப்பற்றினால் தான் ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அதிமுக. அதனால், ஜெ.,வை அடுத்து, தலைவர்கள் இல்லாமல் உள்ள அதிமுகவின் எதிர்காலம் இந்த தேர்தலில் உள்ளது.

2011 முதல் நடந்த சட்டமன்றம், மக்களவைத் தேர்தலில் தொடர் தோல்விகளைச் சந்தித்த திமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி இருந்த போதும், வேட்பாளர்கள் தேர்வு, தொகுதிப் பங்கீடு என முக்கிய முடிவுகளை ஸ்டாலின் எடுத்திருந்தாலும் அவரது புகழ் கலைஞரைத் தாண்டி பரவவில்லை. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால், அனைவரது எதிர்பார்ப்பும் அவர் பக்கம் திரும்பியுள்ளது. இதுவே, ஸ்டாலினுக்கு பெரும் சவால்தான்.

அடுத்து தேமுதிக. கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் களம் இறங்கிய தேமுதிக படு தோல்வி அடைந்தது. அடுத்து, விஜயகாந்த்தின் உடல்நிலை சரியில்லாமல் போகவே, கட்சியின் செயல்பாடு சிறப்பாக இல்லாமல் போனது. அதோடு, பிரேமலதா, சுதிஷை தவிரச் சொல்லும் படியான தலைவர்கள் தேமுதிகவில் இல்லை. அதனால், அதிமுக ஒதுக்கியுள்ள நான்கு இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே தேமுதிகவின் எதிர்காலம் சிறக்கும்.அதிமுக-வை தன் வசப்படுத்த வேண்டும் என்ற டிடிவி தினகரனின் குறிக்கோள் இலக்கை அடைய, இந்த தேர்தலில் அதிமுக, அமமுக இரண்டும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இரண்டில், ஒன்று நடக்கவில்லை என்றாலும் பாதிப்பு அவருக்கே.நெக்ஸ்ட் மக்கள் நீதி மய்யம். நடிகர்கள் அரசியல் பிரவேசம் எடுப்பது புதிதல்ல. அந்த வகையில், கமல்ஹாசனின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலில் தெரிந்துவிடும்.அதிமுக, திமுக, தேமுதிக-வின் நிலை என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

More News >>