திமுக...அதிமுக...என்னிடம் மோதுவதா உறுதியுடன் தேர்தலில் களம் இறங்கும் பவர் ஸ்டார் nbsp

தமிழ்த் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான பவர் ஸ்டார், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் பவர் ஸ்டார் (சீனிவாசன்), தென் சென்னை தொகுதியில் களம் இறங்குகிறார். இதே தொகுதியில், திமுக சார்பில் தங்கபாண்டியனின் மகளும் எழுத்தாளருமான தமிழச்சி போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். தென் சென்னையில் திமுக, அதிமுக-வும்  நேரடியாக மோதுகின்றன.

இந்நிலையில், தான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும், தென் சென்னை தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி காண்பேன். வெற்றியுடன் மக்கள் பணியைத் தொடர் காத்திருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

More News >>