மட்டன் பிரியாணி ரூ.200... சிக்கன் பிரியாணி ரூ.180 ... தேர்தல் ஆணையத்தின் விலைப்பட்டியல் தான்
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு கணக்கு வழக்குகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள தேர்தல் ஆணையம் அதற்கான விலைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி மக்களவை மற்றும் 18 சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இந்தத் தேர்தலில் மக்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ 70 லட்சமும், சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவோர்க் 28 லட்சம் வரையும் செலவு செய்யலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்ட நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவின பார்வையாளர்களை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம் . போட்டியிடும் வேட்பாளர்கள் எந்தெந்த வகையில், எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை விலை நிர்ணயம் செய்து பட்டியலும் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம் .
அதன்படி டிபன் செலவு ரூ100, மட்டன் பிரியாணி ரூ200 , சிக்கன் பிரியாணி என்றால் ரூ 180 என்று டீ முதல் மண்டபம், மேளம், மாலை, மைக்செட் என ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற பட்டியலையும் இந்தத் தேர்தலில் முதல்முறையாக வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.