ஸ்பெஷல் தேங்காய் முந்திரிப் பர்ப்பி ரெசிபி

வீட்டிலேயே ஈசியா செய்யக்கூடிய ஸ்பெஷல் தேங்காய் முந்திரிப் பர்ப்பி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு & ஒரு கப்

துருவிய தேங்காய் & ஒரு கப்

பால் & ஒரு கப்

நெய் & ஒரு கப்

சர்க்கரை & 2 கப்

முந்திரி, பாதாம் &1 கப்

ஏலக்காய்த் தூள் & தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கடலை மாவு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

பச்சை வாசனைபோனப் பிறகு, துருவிய தேங்காய் அத்துடன் சேர்த்து கிளறவும்.பிறகு, சர்க்கரை, பால் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். சர்க்கரை கரைந்து வரும்போது, பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.இறுதியாக, கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.

பர்ப்பி ஓரளவுக்கு கெட்டி பதத்திற்கு வந்த பிறகு, ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி சமம் செய்துவிடவும்.

5 நிமிடங்கள் கழித்து, கத்தியைக் கொண்டு துண்டுகள்போட்டு பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான தேங்காய் முந்திரிப் பர்ப்பி ரெடி..!

More News >>