சட்டுன்னு செய்யலாம் பிரெட் ஹல்வா ரெசிபி
ரொம்ப ஈசியா செய்யக்கூடிய பிரெட் ஹல்வா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டுகள் & 8
உடைத்த முந்திரி & கால் கப்
நெய் & அரை கப்
சர்க்கரை & அரை கப்
பால் & 2 கப்
செய்முறை:
முதலில், பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி, துண்டுகள் போடவும்.ஒரு வாணலியில் அரை கப் நெய் சேர்த்து, அது உருகியதும் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில், பிரெட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.பிரெட் வறுப்பட்டதும், பால் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
இதற்கிடையே, வறுத்து வைத்த முந்திரிப் பருப்பில் பாதியளவை எடுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
பிரெட் பாலுடன் நன்றாக வெந்ததும், முந்திரிப் பருப்பு பொடி, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இறுதியாக, வறுத்த முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். தேவைப்பட்டால், நெய்யை கூடுதலாக சேர்த்துக் கொள்ளவும்.இந்த கலவை ஹல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான பிரெட் ஹல்வா ரெசிபி ரெடி..!