கிரிஸ்பி பன்னீர் 65 ரெசிபி

ப்ரைட் ரைசுக்கு சூப்பரான சைட் டிஷ் கிரிஸ்பி பன்னீர் 65 எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பனீர் & 200 கிராம்

சோள மாவு & 4 டீஸ்பூன்

அரிசி மாவு & 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் & சிறிதளவு

கரம் மசாலா & அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் & 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது & 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் & 2

கறிவேப்பிலை & சிறிதளவு

மிளகு & சிறிதளவு

உப்பு & தேவையான அளவு

எலுமிச்சைப்பழம் & பாதி

செய்முறை:

ஒரு பௌலில், சோள மாவு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை, எலுமிச்சைப்பழ சாறு பாதி, மிளகு, உப்பு ஆகியவற்றடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.அத்துடன், பனீர் துண்டுகளை சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், மசாலாவுடன் கூடிய பனீரைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

இறுதியாக, பொரித்து எடுத்த கறிவேப்பிலையை அதன்மீது தூவினால் சுவையான பனீர் 65 ரெடி..!

More News >>