விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனுக்கு பானை சின்னம்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பானைச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம் .
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இந்த முறை சின்னம் ஒதுக்க மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம். புதிய சின்னம் ஒதுக்குவதிலும் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது நேர்தல் ஆணையம் .
இதனால் ஏற்கனவே அறிவித்தபடி சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட உள்ளார். விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது