பிரித்விராஜ் மோகன்லால் காம்போவில் அசத்தல் படைப்பு.. திக் திக் அரசியல் த்ரில்லர் லூசிஃபர்
நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபெர் ' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் பிரித்விராஜ் மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர் . தமிழ் தெலுங்கு , பாலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர். தமிழ் சினிமாவில் கனா கண்டேன் படத்தில் அறிமுகமாகிய இவர் பாரிஜாதம் , மொழி , அபியும் நானும் , ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் , பாடகர் , தயாரிப்பாளர் என அனைத்து பன்முகம் கொண்ட இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். .இயக்குனராக இவர் இயக்கும் முதல் படம் 'லூசிஃபெர் '. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் மோகன்லால் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் விவேகம் புகழ் விவேக் ஓபராய் , மாரி 2 புகழ் டோவினோ தாமஸ் , இந்திரஜித், ஜான் விஜய் ,சுரேஷ் மேனன் , கலாபவன் சாஜன் ஆகியோருடன் பிரித்விராஜ் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.நடிகர் , திரைக்கதை ஆசிரியர், பாடகரான முரளி கோபி அவர்கள் இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.புலிமுருகன் படத்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி. பாலு இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் சாதுமிரண்டா படத்திற்கு இசையமைத்த தீபக் தேவ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள அரசியல் கலந்த த்ரில்லர் படம். படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
லூசிஃபர் ட்ரெய்லர் லின்க் : https://goo.gl/LgLuhC