பார்ட்னர்ஸ் ஆக மாறிய நடிகை ஹன்சிகா, `அரவான் நாயகன் ஆதி

`மகா' படத்தில் நீண்ட நாள் கழித்து சிம்புவுடன் ஹன்சிகா நடித்து வருகிறார்.  இதனிடையே தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஈரம், அரவான், யூ-டர்ன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஆதி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிகை ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த பாலக் லல்வாணி இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

படத்தில் இயக்குநர் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், விடிவி கணேஷ், ஜான்விஜய், இயக்குநர் ரவிமரியா, `டைகர்'தங்கதுரை ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு `பார்ட்னர்' எனத் தலைப்பிட்டுள்ளனர். முக்கிய இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார்.  சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். `பார்ட்னர்' திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்ட படமாக இருக்கும் என்கிறது படக்குழு. சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஒரு பேன்டசியாகவும் படம் உருவாக உள்ளதாம். ஹன்சிகா ஆதி ஆகிய இருவரும் நண்பர்களாக படத்தில் வலம்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 

More News >>