`ஊக்கம் கொடுக்க கர்ஜனையுடன் வா தலைவா தேமுதிக ஓர் பார்வை nbsp
தேமுதிக வெற்றிகரமாக 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. இந்த, நிலையில் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த்திடம் எதிர்பார்த்திருப்பது என்னவென்று மக்களவை தொகுதிகள் அனைத்திலும் தெரிய வரும் .
மதுரையில், கடந்த 2005ல் தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார். 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியை கைப்பற்றியது. அடுத்து வந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்று.
2014 முதல் 2016 வரை நடந்த மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. கருணாநிதி, ஜெயலலிதாவைத் தொடர்ந்து வளர்ந்து வரும் தலைவராக இருந்தார் விஜயகாந்த் மற்றும் விஜயகாந்த் பிரேமலதா அவர்களும் . தேர்தல் பொதுக்கூட்டம், கட்சி நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட கூட்டங்கள் என அவரது கர்ஜனை பேச்சு தொண்டர்களை ஊக்கப்படுத்தியது என்றே சொல்லலாம்.
நடக்கும் தேர்தலில், அதிமுக பாஜக கூட்டணி - அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடும் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தலின் முடிவைப் பொறுத்தே தேமுதிகவின் எதிர்காலம் உள்ளது என்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபின் பெரும் ஆதரவு கிட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை என அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடித்து விட்ட நிலையில், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் பிரசாரக் கூட்டங்களில் விஜயகாந்த் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பார் எனத் தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சைலன்ட் பிரசாரம் தலைவர் செய்வார் எனச் சமீபத்தில் சுதீஷ் தெரிவித்தார். இந்த அறிவிப்பு தொண்டர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
`தலைவரின் பேச்சுக்கு நாங்கள் அடிமை. அவர், பங்கேற்கும் பிரசாரம், நிர்வாக கூட்டங்களில் அவரின் பேச்சு ஊக்கம் அளிக்கும். ஆனால், சில நாட்களாக தலைவரின் உடல்நிலை சரியில்லை. முன்புபோல் அவர் இல்லை. மீண்டும் உனது கணீர் குரலைக் கேட்கவேண்டும். வா தலைவா’ எனத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர்.