தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா மோடி பயோபிக்? - ட்ரெய்லர் இதோ
By Sakthi
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகிவரும் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பே, படமும் வெளியாகவிருக்கிறது.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி இப்பொழுது நம் எல்லோர் மனதிலும் இருக்கும். நாட்டின் மிக முக்கிய தருணமான நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் நரேந்திர மோடி பயோபிக் படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு படத்தை ஏப்ரல் 12ல் வெளியிட படக்குழு முன்னர் திட்டமிட்டிருந்தது. ஆனால் தேர்தல் 11ஆம் தேதியே தொடங்குவதால், படத்தை ஒரு வாரம் முன்னதாக, அதாவது ஏப்ரல் 5ல் வெளியிட படக்குழு உறுதி செய்துள்ளது. தற்பொழுது நரேந்திர மோடி பயோபிக் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்பதை டிரெய்லரில் சொல்லிவிடுகிறார்கள். இப்படத்தில் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். மோடி கேரக்டரில் நடிப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் விவேக் ஓபராய். ஓமங் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் அரசியல் பின்புலத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மோடியின் ஆட்சிக் காலமான 2014 முதல் தற்பொழுது வரை இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மோடியின் இளமை காலம், எப்படி அரசியலுக்குள் வந்தார் என மோடியின் வாழ்க்கையை குறித்த ஒரு படமாக இது உருவாகியுள்ளது. தேர்தலுக்கு முன்னாடியே வருவதால், இந்தப் படம் ஒரு பெரிய அலையை மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
பிஎம் நரேந்திரமோடி பட டிரெய்லர் : https://youtu.be/X6sjQG6lp8s