ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசு பணியிடங்களில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணியில் தனி ஒதிக்கீடு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு பணியிடங்களில் குரூப் ஏ,பி,சி பிரிவுகளின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு பணிகளில் 3 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இனி இது 4 சதவீதமாக உயர்த்தப்படும் என அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேற்கொண்டு கூறியதாவது: மத்திய அரசு துறைகளுக்கான வேலைவாய்ப்பில் பார்வையிழந்தோர், பார்வை குறைபாடு கொண்டவர்கள், செவித்திறன் அற்றவர்கள் அல்லது கேட்கும் திறன் குறைவாக உடையவர்கள், நடமாட்டத்தில் சிரமத்துக்குள்ளானவர்கள், குணமடைந்த தொழுநோயாளிகள் மற்றும் ஆசிட் வீச்சில் ஒதுக்க வேண்டும்.

கற்றல் குறைபாடு கொண்டவர்கள், மனவளம் சார்ந்த நோய்கள் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த 4 சதவீதத்தில் தனியாக ஒரு சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என மத்திய அரசின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், இந்த முடிவு கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயரதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

More News >>