திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல் இலவச உணவும் இல்லை - தேவஸ்தானம் அறிவிப்பு

சந்திர கிரணத்தையொட்டி வரும்31ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

2018-ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு (Super Blue Blood) வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்திருந்தது.

இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி முதல் தேதியில் ஒன்றும், ஜனவரி 31-ஆம் தேதி மற்றொன்றுமாக சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்ற உள்ளது. ஜனவரி 31-ஆம் தேதியன்று பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் என்பதால் நீல நிலா தோன்ற உள்ளது.

அன்றைய தினத்தில் நிலா, பூமியின் மிக அருகில் இருக்கும். எப்போதும் காணப்படுவதை விட 30 சதவிகிதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் வானில் தென்படும். அடுத்த முழு சந்திர கிரகணம் டிசம்பர் 31, 2028-லும், அதற்கு அடுத்த முழு சந்திர கிரகணம் ஜனவரி 31, 2037-லும் நிகழவுள்ளன.

இந்நிலையில், சந்திர கிரணத்தையொட்டி வரும்31ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும். காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோயில் நடை மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், திவ்ய தரிசனம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தரிசனமும் ரத்து செய்யப்படுவதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தவிர வரும் 31ம் தேதி அன்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் இலவச உணவும், காத்திருப்பு அறையில் பக்தர்கள் தங்கவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

More News >>