பொள்ளாச்சி பாலியல் வழக்கின் சாட்சியாகப் பார்க்கிறார்கள் காங்., செயல்தலைவர்nbspமயூராnbsp
பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிபிசிஐடியிடம் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளதாகத் தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக சிபிசிஐடி, காவல்துறையினர் சம்மன் அனுப்பியதையடுத்து கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மயூரா ஜெயகுமார் செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது, பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் பிப்ரவரி 12ம் தேதி தான் பொள்ளாச்சியில் இல்லையென்றும், அன்றையதினம் கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தந்தையுடன் திருநாவுக்கரசு கோவையில் தன்னை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி சம்மன் அனுப்பியதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘டெல்லி, சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு செயல் தலைவராகப் பதவி உயர்வு அடைந்த பிறகு கோவை வந்ததன்னை, தொழிலதிபர்கள், வியாபாரிகள் எனப் பல தரப்பினர் சந்தித்தனர். அப்போது, பொள்ளாச்சி காங்கிரஸ் உறுப்பினர் ராஜசேகர் வாழ்த்து தெரிவிப்பதற்காகத் திருநாவுக்கரசு மற்றும் அவரது தந்தை கனகராஜுடன் வந்ததாகச் சொன்னதை சிபிசிஐடியிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளதாக கூறினார். தேவைப்பட்டால் அதற்கான ஆதாரங்களை அளிப்பேன் என்றார்.
கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் சந்தித்த நிலையில், தனக்குத் திருநாவுக்கரசைத் தெரியாது என்றும், சிபிசிஐடி புகைப்படம் காண்பிக்கும் போதுதான் திருநாவுக்கரசை தெரியும் என்றவர், இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கும் தனக்கும் எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது என்றும், தன்னை பொருத்தவரை தான் இந்த வழக்கில் சாட்சியாகப் பார்ப்பதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக கட்சித் தலைமையிடம் விளக்கமளித்து விட்டதாகவும், மக்களிடம் தான் விளக்கமளிக்க வேண்டும் என்றவர், இரு பெண்கள் தனக்கு உள்ளதைச் சுட்டிக்காட்டியவர், இதிலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவேன் என்றார்.