சுதீஷ் வீட்டிற்கு திடீரென துப்பாக்கி ஏந்தியnbspபோலீஸ்nbspபாதுகாப்பு!
தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், உடல்நிலைக் காரணமாகக் கட்சி நிர்வாகத்தில் சற்று ஒதுங்கியிருக்கிறார். ஆகையால், அவரின் மனைவி பிரேமலதா கட்சி பொறுப்புகளைக் கவனித்து வருகிறார். பிரேமலதாவுடன், அவரின் சகோதரர் சுதீஷ் பக்கபலமாக நின்று கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தேமுதிகவின் துணை செயலாளராக உள்ள சுதீஷ், தேர்தலில் அதிமுக ஒதுக்கிய கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனான கௌதம சிகாமணி போட்டியிடுகிறார். திமுக-வை எதிர்த்து நிற்கும் சுதீஷ்-க்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள சுதீஷ் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது பாதுகாப்பு வேண்டும் என்கிற பட்சத்தில் போலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும். சுதீஷ் தரப்பில் எவ்வித பாதுகாப்பும் கோரவில்லை என்று தெரிவிக்கும் போலீஸார், மேலிடத்தின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கலாம் என்று கூறுகின்றனர்.