`பிரச்சாரமும் இல்லை போட்டியும் இல்லை - அஜித் பாணியை பின்பற்றிய சல்மான் கான்

நடிகர் சல்மான் கான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்ற தகவல் கடந்த சில தினங்களாக பரவி வந்தது.

மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா கோட்டையான இந்தூரில் பிரசாரம் செய்ய சல்மான்கானுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்ததாகவும், அழைப்பை ஏற்று இந்தூரில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் குறித்து சல்மான் கான் விளக்கம் அளித்துள்ளார். அதில், ``தேர்தல்களில் போட்டியிடவில்லை, எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்யப்போவதும் கிடையாது. இவை அனைத்தும் புரளிகளே" என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தை மறுத்துள்ள அதே வேளையில், ``நாம் ஜனநாயக நாட்டில் உள்ளோம், வாக்களிப்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமையாகும். வாக்களிக்க தகுதிப்பெற்ற இந்தியர்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்ய வேண்டும், அரசை நிர்ணயம் செய்வதில் கலந்துக்கொள்ளுங்கள் என வலியுறுத்துகிறேன்" என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க இளைஞர்களின் ஓட்டுரிமை குறித்து வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நேரம் என்பதால் சினிமா பிரபலங்கள் அரசியல் களத்தில் இறங்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் கூட அஜித் குமார் அரசியலில் களமிறங்கவுள்ளார் என வதந்தி பரவியது. ஆனால் ஓட்டு போடுவதே எனது உச்சபட்ச அரசியல் என அறிக்கை ஒன்றை அஜித் வெளியிட்டு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

More News >>