நாளை அமமுக தேர்தல் அறிக்கை, 2-வது வேட்பாளர் பட்டியல் - தேனியில் களமிறங்குகிறாரா தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையும் , 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலும் நாளை வெளியிடப்படும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதனால் தேனி தொகுதியில் தினகரன் களம் காண்பாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே நிலவுகிறது.

தமிழகத்தில் 39 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அமமுக தனித்து களம் காண்கிறது. மக்களவைத் தேர்தலில் மட்டும் மத்திய சென்னை தொகுதியை மட்டும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கியுள்ள அமமுக, முதற்கட்டமாக 24 மக்களவை மற்றும் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் நாளை அறிவிக்கப்பட உள்ளது.அத்துடன் அமமுக தேர்தல் அறிக்கையும் நாளை வெளியிடப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஓ பிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி மக்களவைத் தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் பெயரை அமமுக அறிவிக்கவில்லை. இதனால் நாளை வெளியாகும் பட்டியலில் தேனி தொகுதியில் தினகரன் பெயர் இடம் பெறுமா? அல்லது தேனி மற்றும் ஆண்டிபட்டி ஆகிய இரு தொகுதிகளிலும் தங்க .தமிழ்ச்செல்வனே களமிறக்கப்படுவாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

More News >>