சபாஷ் சரியான போட்டி...! தேனியில் ஓ.பி.எஸ் மகனை எதிர்க்கிறார் தங்க. தமிழ்ச்செல்வன் அமமுக 2-வது பட்டியல் அறிவிப்பு

அமமுக சார்பில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை எதிர்த்து பரம எதிரியான அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க .தமிழ்ச்செல்வனை களத்தில் இறக்கி மல்லுக்கட்ட விட்டுள்ளார் டிடிவி தினகரன்.

மக்களவையில் ஒரு தொகுதியை எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கிவிட்டு 38 தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் அம முக போட்டியிடுகிறது. முதற்கட்டமாக 24 மக்களவை, 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த நிலையில் எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான 2-வது பட்டியலை அறிவித்துள்ளார் டிடிவி தினகரன்.

மக்களவை வேட்பாளர் விபரம்:

1.வடசென்னை :சந்தானகிருஷ்ணன்.மாவட்ட கழக செயலாளர்வடசென்னை தெற்கு மாவட்டம்

2.அரக்கோணம் :பார்த்திபன்,மாவட்ட கழக செயலாளர்வேலூர் கிழக்கு மாவட்டம்

3.வேலூர்:கே.பாண்டுரங்கன்,முன்னாள் அமைச்சர்,கழக அமைப்புச் செயலாளர்

4.கிருஷ்ணகிரி:கணேசகுமார்,மாவட்ட கழக செயலாளர்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்.

5.தருமபுரி :பி..பழனியப்பன்,முன்னாள் அமைச்சர்கழக தலைமை நிலையச் செயலாளர் .

6.திருவண்ணாமலை: ஞானசேகர் , மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், வேலூர் மேற்கு மாவட்டம்.

7.ஆரணி : ஜி..செந்தமிழன் :முன்னாள் அமைச்சர்கழக தேர்தல் பிரிவு செயலாளர்

8.கள்ளக்குறிச்சி : எம்.கோமுகி மணியன்,மாவட்ட கழக செயலாளர்விழுப்புரம் தெற்கு மாவட்டம்.

9.திண்டுக்கல் : பி.ஜோதிமுருகன்,தாளாளர், சுரபி கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை

10:கடலூர் :கார்த்திக்,கழக பொறியாளர் அணி செயலாளர் .

11.தேனி :தங்க தமிழ்செல்வன்,கழக கொள்கை பரப்புச் செயலாளர்மாவட்ட கழக செயலாளர்தேனி மாவட்டம்.

12.விருதுநகர் :எஸ்.பரமசிவ ஐயப்பன்,கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் .13.தூத்துக்குடி : டாக்டர்.ம.புவனேஸ்வரன்,மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.

14.கன்னியாகுமரி :லெட்சுமணன், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர்

சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள்:

1.சோளிங்கர் : டி.ஜி.மணி,நெமிலி மேற்கு ஒன்றிய கழக செயலாளர்வேலூர் கிழக்கு மாவட்டம்.

2.பாப்பிரெட்டிபட்டி: டி.கே.ராஜேந்திரன்,மாவட்ட கழக செயலாளர், தருமபுரி மாவட்டம்.

3.நிலக்கோட்டை (தனி) : R.தங்கதுரை,கழக அமைப்புச் செயலாளர்கழக தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்மாவட்ட கழக செயலாளர்திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்.

4.திருவாரூர்:S.காமராஜ் மாவட்ட கழக செயலாளர்திருவாரூர் மாவட்டம்.

5.தஞ்சாவூர்: M.ரெங்கசாமி,கழக பொருளாளர்மாவட்ட கழக செயலாளர்தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்.

6.ஆண்டிப்பட்டி:R.ஜெயக்குமார்,ஆண்டிப்பட்டி ஒன்றிய கழக செயலாளர்தேனி மாவட்டம்.

7.பெரியகுளம் (தனி) :டாக்டர் K.கதிர்காமு :கழக மருத்துவரணி தலைவர்.

8.விளாத்திகுளம்:டாக்டர் K.ஜோதிமணி,மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.

புதுச்சேரி மாநிலம்தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் என்.முருகசாமியையும் வேட்பாளராக டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.

More News >>