வெஜ்nbspபிரியாணிக்குnbspஅக்கப்போரா!nbspஅதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு!nbsp
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களில் பயங்கர பிஸியாக இருக்கின்றனர்.
அதோடு, தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களையும் ஒருசேர நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் இடையில் சில நகைக்கும் சம்பவங்களும் நிகழ்வது வழக்கம்.
அந்த வகையில், அதிமுக வேட்பாளர் சார்பில் திருவண்ணாமலையில் அறிமுகக் கூட்டம் கலசப்பாகத்தில் நடைபெற்றது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்தி வைத்து பிரசாரம் மேற்கொண்டார்.
அறிமுகக் கூட்டம் முடிந்ததை அடுத்து, கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தொண்டர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட வெஜ் பிரியாணி உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல கட்சி தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.