யாரும் முத்தம் கொடுக்க முன் வரலையா..?ம.பி முதல்வர் கமல்நாத்துக்கு குவியும் டுவீட்டுகள்
ஹோலி கொண்டாடிய ஃகலர்புல் முகத்துடன் கூடிய புகைப்படங்களை மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் சமூக வலைதளங்களில் பதிவிட, அவரை ஏகத்துக்கும் கிண்டல் செய்துள்ளனர் டிவிட்டர் வாசிகள் .
நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மத்திய பிரதேச முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் தான் ஹோலி கொண்டாடிய கலர், கலர், கலர்புல் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
மக்களிடம் நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும் என்ற ஆர்வக் கோளாறில் கமல்நாத் பதிவிட்டார். ஆனால் பாவம் கமல் நாத், இப்போது நம் நெட்டிசன்களிடம் கேலியும், கிண்டலுக்கு ஆளாகி விட்டார். பொதுவாக ஹோலி கொண்டாடினால் தலை முதல் கால் வரை, ஆள் அடையாளம் தெரியாத வகையில் பல வண்ணப் பொடிகளை விசிறியடித்து விளையாடுவர். ஆனால் கமல்நாத் தோ முகத்தில் மட்டும் வண்ண வண்ண பொடிகளை முகத்தில் மட்டுமே பூசியுள்ளார். அணிந்திருக்கும் வெள்ளை குர்தா அப்படியே பளிச்சென வெண்மையாக காணப்படுகிறது.
தப்பைக் கண்டுபிடிப்பதில் தான் நம்மூர் வாசிகள் கில்லாடிகளாச்சே.. அதுவும் அரசியல்வாதிகள் என்றால் கூர்ந்து கவனிக்க மாட்டார்களா? என்ன ஹோலி என்ற பெயரில் நாடகமா? என்று கண்ட மேனிக்கு டிவிட்டரில் கிண்டலும் கேலிக்கும் ஆளாகியுள்ளார்.
நல்லாத்தான் மேக் அப் போட்டிருக்கீங்க சார் என்று ஒருத்தரும், ஏதோ காஸ்மெடிக் கடையில வண்ண வண்ண லிப்ஸ்டிக்கை சாம்பிள் பார்த்தீராக்கும் என்று மற்றொருத்தரும் கிண்டலடித்துள்ளனர்.
இன்னொரு குறும்பு வாசியோ என்ன சார் ? உங்களுக்கு கிஸ் கொடுக்க பொண்ணுங்க யாரும் முன் வரல போலும்... உங்களுக்கு நீங்களே முத்தம் கொடுத்துக் கொண்டீரோ? என்று கலாய்த்துள்ளார். இது போன்ற ஏகப்பட்ட மீம் ஸ்கள் எதிர்ப்பதமாக திரும்ப தர்மசங்கடத்தில் உள்ளாராம் கமல்நாத்.