சிவகார்த்திகேயன்.. சிம்பு.. nbspஅடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் பிரபல இயக்குநரின் மகள்
சிம்புவுக்கு சமீபத்தில் வெளியான படம் வந்தா ராஜாவா தான் வருவேன். இப்படத்துக்குப் பிறகு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் மாநாடு படம் பிப்ரவரி 3ஆம் தேதி பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் படம் இன்னும் தொடங்கவில்லை. சிம்புவோ உடல் எடையைக் குறைக்க வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார். படத்துக்காக தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மாநாடு படம் டிராப் செய்யப்பட்டதாக வதந்திகள் வெளியானது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதற்கான விளக்கத்தை அளித்தார். படத்துக்காக நடிகர் நடிகைகள் தேர்வு நடந்துவருவதாக, ஒரு தகவலையும் அளித்தது தயாரிப்பு தரப்பு. அதன்படி, சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகியிருக்கிறார். முன்னதாக, சிம்புவுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்துவருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். இப்படத்தை முடித்த கையோடு, சிம்பு படத்திலும் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரகுமானுடன் கல்பனா எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.