யம்மி பிரைட் ஸ்வீட் பனனா ரெசிபி

குழந்தைகளுக்கு பிடித்த சூப்பர் ஸ்னாக் யம்மி பிரைட் ஸ்வீட் பனனா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் & 2

பால் & அரை கப்

மைதா & 2 டீஸ்பூன்

சோளமாவு & 2 டீஸ்பூன்

பொடித்த சர்க்கரை & 1 டீஸ்பூன்

எண்ணெய் & பொரிப்பற்கு

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.பிறகு, ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதாமாவு என இரண்டையும் கலந்து பால் சேர்த்து நன்றாக பஜ்ஜி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், வாழைப்பழ துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எண்ணெய்யில்விட்டு பஜ்ஜிப் போன்று பொரித்து எடுக்கவும்.

இறுதியாக, பொடித்த சர்க்கரையை பொரித்த வாழைப்பழம் மீது தூவி பரிமாறவும்.அவ்ளோதாங்க.. சுவையான பிரைட் ஸ்வீட் பனனா ரெசிபி ரெடி..!

More News >>