இலங்கையில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ரூ.26 ஆயிரம் கோடி முதலீடு? -அதிர்ச்சி தகவல்

திமுக-வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி வேட்பாளருமான ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர், இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மூதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கிலப்பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

''இலங்கையில் 3.85 பில்யின் யு.எஸ் டாலர்கள் முதலீட்டில், எண்ணை சுத்திகரிப்பு ஆலை அமையவுள்ளது. சிங்கபூரைச் சேர்ந்த சில்வர் பார்க் இண்டர்நேசனல் என்கிற நிறுவனம் மூலமாக இதில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக, இலங்கை அரசின் முதலீட்டு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள சில்வர் பார்க் இண்டர்நேசனல் நிறுவனம் ஓமன் நாட்டைச் சேர்ந்த  நிறுவனத்துடன் இணைந்து, எண்ணை சுத்திகரிப்பு மற்றும் சேகரிப்பு ஆலையை இலங்கையில் அமைப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், ஓமன் நிறுவனம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சில்வர் பார்க் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தப்பட்டதாகவும் ஒப்பந்தம் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும் முதலீடு செய்வது உறுதி என்று தெரிவித்த சில்வர் பார்க் இண்டர்நேசனல் நிறுவனம் முதலில் 1. 887 மில்லியன் யு.எஸ். டாலர்களை நேரடியாக முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. மீதம் உள்ள 2000- ம் மில்லியன் டாலர்களை கடனாக பெற இருப்பதாக இலங்கை அரசு கூறியுள்ளது. அதாவது, தொடங்கப்படவுள்ள ஆலையில் சுமார் 70 சதவிகிதத்தை சில்வர்பார்க் நிறுவனம் முதலீடு செய்கிறது. தகவலை இலங்கை அரசும் உறுதிபடுத்தியுள்ளது.

சில்வர் பார்க் நிறுவனத்திய் இயக்குனர்களாக, சுந்தீப் ஆனந்த ஜெகத்ரட்சகன், ஸ்ரீநிஷா ஜெகத்ரட்சகன் மற்றும் அனுசியா ஜெகத்ரட்சகன் ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன், மகள் மற்றும் மனைவி''  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் அரக்கோணம் மக்களவை தொகுதியில் ஜெகத்ரட்சகன் போட்டியிடும் நிலையில், இலங்கையில் ஜெகத்ரட்சகன் முதலீடு செய்திருப்பதாக வெளியானத் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் அதிக பணபலம் உள்ளவரான ஜெகத்ரட்சகன் வருமான வரி சோதனையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

More News >>