பழகியவர்களுக்காக உயிரையும் கொடுப்பார் - அஜித் உடனான நாட்களை பற்றி நெகிழ்ந்த ரங்கராஜ் பாண்டே
அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரங்கராஜ் பாண்டே.
அஜித் நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும் படம் நெர்கொண்ட பார்வை. எச்.வினோத் இயக்கிவரும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, வித்யாபாலன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர். அதிலும் வித்யாபாலன் தமிழில் அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அமிதாபச்சன் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான பிங்க் பட ரீமேக்கான இதின் ஷூட்டிங் ஹைதராபபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்துடன் நடித்தது குறித்து அவரின் யூடியூப் சேனலில் ஓர் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். “ எல்லோரும் சொல்வது போலதான், அவர் மிக அற்புதமான மனிதர். ஆச்சரியப்படுத்தும் வகையில் பழக்கூடியவர். பழகியவர்களுக்காக உயிரையும் கொடுக்க கூடியவர். ஆச்சரியங்கள் நிறைந்த மனிதர். அவரோடு தொடர்ந்து 15 நாட்கள் காலை முதல் மாலை வரை படப்பிடிப்பில் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அது மறக்க முடியாத அனுபவம்” என்று நெகிழ்சியுடன் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் முடிய தாமதமாகும் என்பதால் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.