இரண்டாவது முறையாக, தமிழின் இரண்டு டிரெண்டிங் வில்லன்கள் ஒரே படத்தில்
விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தில் வில்லன் ரோலில் ‘ஒயிட் டெவில்’ கேரக்டரில் மிரட்டியவர் அர்ஜூன். மணிரத்னம் இயக்கிய செக்கசிவந்த வானம் படத்தில் வில்லனாக அசத்தியவர் அரவிந்த்சாமி. இவ்விரண்டு வில்லன்களும் ஒரே படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.
சதுரங்கவேட்டை 2 படத்தை இயக்கியிருக்கும் நிர்மல் குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு வில்லனாக அர்ஜூன் நடிக்கவிருக்கிறார். எட்செட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் இப்படத்தை தயாரிக்கிறார்.
தற்பொழுது ‘கொலைகாரன்’, ‘வால்டர்’ படங்களில் அர்ஜூன் நடித்துவருகிறார். அதுபோல, ‘சதுரங்க வேட்டை 2’, ‘கள்ளப்பார்ட்’ படங்களில் அரவிந்த்சாமி நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, 2013ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் அர்ஜூனும், அரவிந்த்சாமியும் இணைந்து நடித்தார்கள். இரண்டாவது முறையாக மீண்டும் இரண்டு வில்லன்களும் ஒரே படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.