16 மனிதர்களை வேட்டையாடிய அவ்னி புலியின் கதை... ஹீரோவாக சிபிராஜ்
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நடிகர் சிபிராஜ்.
கடந்த 2017ல் சிபிராஜ் நடிப்பில் வெளியான படம் சத்யா. கடந்த வருடம் சிபிக்கு எந்த படமும் வெளியாகவில்லை. தற்பொழுது ரங்கா, மாயோன் படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் புதிதாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.
சிபிராஜ் நடிப்பில் வெளியான ஜாக்சன் துரை படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்தே இந்தப் படம் உருவாக இருக்கிறதாம். இப்படத்தில் சிபி, வனத்துறை அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். சிபிக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் நிலவுகிறது.
கடந்த 2016ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் அவ்னி என்ற புலி, 16 மனிதர்களை வேட்டையாடி கொன்றது. அந்த சம்பவத்தை மையமாக வைத்தே படத்தை உருவாக்கவிருக்கிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இரண்டு நாள்கள் முன்னரே இதுகுறித்து சிபி ராஜ் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.