நள்ளிரவில் வெளியான காங். பட்டியல் : ராகுல் சிபாரிசில் 3 பேருக்கு லக் - சிவகங்கைக்கு இன்னும் இழுபறி
இதோ, அதோ என இழுபறியாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியிட்டது அக்கட்சி மேலிடம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கை தொகுதிக்கு இன்னும் இழுபறி நீடிக்கிறது.
காங்கிரசில் வழக்கம் போல இந்த முறையும் கோஷ்டித் தலைகளே தொகுதிகளை பங்கு பிரித்துள்ளது.வேட்பாளர்கள் விபரம்:
1.திருவள்ளூர் - டாக்டர் ஜெயக்குமார் (காங்கிரஸ் செயல் தலைவர்)
2.கிருஷ்ணகிரி - டாக்டர் செல்லக்குமார் (முன்னாள் எம்எல்ஏ)
3.ஆரணி - விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ் செயல் தலைவர்)
4.கரூர் - ஜோதிமணி (காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்)
5.திருச்சி - திருநாவுக்கரசர் (காங்கிரஸ் முன்னாள் தலைவர்)
6. தேனி - ஈவிகேஎஸ் இளங்கோவன் (காங்கிரஸ் முன்னாள் தலைவர்)
7.விருதுநகர் - மாணிக் தாகூர் (முன்னாள் எம் பி )
8.கன்னியாகுமரி -எச்.வசந்தகுமார் (காங்கிரஸ் செயல் தலைவர்)
புதுச்சேரி தொகுதியில் முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டப் பேரவை சபாநாயகருமான வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 8 வேட்பாளர்களில் 3 பேர் தற்போதைய செயல் தலைவர்கள் இருவர் முன்னாள் தலைவர்கள். ஜோதிமணி, செல்லக்குமார், மாணிக் தாகூர் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சாய்ஸ் என்று கூறப்படுகிறது.
தேர்தல் 2019, சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இங்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அல்லது கார்த்தியின் மனைவிக்கு சீட் கொடுக்க கடும் கட்சிக்குள் எதிர்ப்பு இருப்பதால் இழுபறி என்று கூறப்படுகிறது