27-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரேமலதா தீவிர பிரச்சாரம் - தேமுதிக அறிவிப்பு
அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், உடல் நிலை காரணமாக இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது சந்தேகமாக உள்ளது. ஒரு சில பிரச்சார மேடைகளில் மட்டும் அமர வைக்கப்படுவார் என்று தெரிகிறது.
இதனால் விஜயகாந்துக்கு பதிலாக பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஆதரித்து தமிழகம் பிரச்சாரம் செய்வார் என்று தேமுதிக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27-ந் தேதி மாலை 4 மணிக்கு திருப்பூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கும் பிரேமலதா பிரச்சாரம் முடிவடையும் நாளான ஏப்ரல் 16-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.