கோவை-மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து
சென்னை: கோவை மற்றும் மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பிப்ரவரி முதல் தேதியில் இருந்து ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையை நீளப்படுத்தம் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அங்குள்ள நடை மேம்பாலத்தை நவீனப்படுத்தி, மின்சார இணைப்பு பணிகளும் செய்யப்படுகிறது.
இதனால், கோவை மற்றும் மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பிப்ரவரி முதல் தேதியில் இருந்து மார்ச் மூன்றாம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
இதைதொடர்ந்து, சென்னை சென்டரலில் இருந்து புறப்பட்டு செல்லும் ரயில் எண்:12671 சென்னை சென்ட்ரல்&மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்:12672 சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் கோவை&மேட்டுப்பாளையம் இடையிலான சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.