பிரச்சார மேடையில் அமைச்சர் பேசும்போது தூங்கி வழிந்த அதிமுக வேட்பாளர் - வைரலான வீடியோ, புகைப்படங்கள்

தேர்தல் பிரச்சார மேடையில் தன்னை ஆதரித்து அமைச்சர் பேசும்போது, எந்தக் கவலையும் இல்லாதது போல் அதிமுக வேட்பாளர் ஒருவர் தூங்கி வழியும் வீடியோவை வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் களம் கோடை வெப்பத்தை விட சூடு பறக்க ஆரம்பித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் தொடங்கி வேட்பாளர்களும், அவர்களை ஆதரித்து தலைவர்கள் , அமைச்சர்களும் தேர்தல் பிரச்சாரத்தை டாப் கியரில் தொடங்கி உள்ளனர். தேர்தல் முடியும் வரை தூக்கத்தை தொலைக்க உள்ளார்.

ஆனால் நாகை மாவட்டம் மயிலாடுதுறை மக்களவை வேட்பாளர் ஆசைமணியோ, வேட்பு மனு செய்த முதல் நாளிலேயே மேடையில் அவரை ஆதரித்து அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிக் கொண்டிருக்கும் போது தூங்கி வழிந்தார். வேட்பாளர் தூங்கி விழுந்ததைக் கண்ட அதிமுக நிர்வாகிகளும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

டெல்டா மாவட்டங்களில் மயிலாடுதுறை தொகுதியில் மட்டுமே திமுக, அதிமுக நேரடியாக மோதுகின்றன. இங்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு களம் காணும் திமுக சார்பில் செ.ராமலிங்கம் தொண்டர்களுடன் முமு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபாடு காட்டிக் கொண்டிருக்க, அதிமுக வேட்பாளர் ஆசை மணி தூங்கி வழியும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைர லாக வருகிறது.

More News >>