நள்ளிரவில் வெளியான சூர்யா பட அப்டேட்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் என்.ஜி.கே. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது.

சூர்யா நடித்துவரும் என்.ஜி.கே. படத்தை செல்வராகவன் இயக்கிவருகிறார். இப்படம் கடந்த வருடம் தீபாவளிக்கே திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இயக்குநருக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் படம் தள்ளிப்போனது. இப்படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்.

காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்திற்கான குரல்பதிவு வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குறிப்பாக, சூர்யா படத்தின் டப்பிங் வேலையில் இருக்கும் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு தகவலை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. அதுவும் நள்ளிரவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சார்ந்த படமென்பதால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மெதுவாகவே நடைபெற்றுவருவதால் படம் வெளியாவது சந்தேகமே என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துவரும் இந்தப் படத்தில் பாலா சிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

More News >>