பயனர் பாஸ்வேர்டுகளை சும்மா பார்த்த ஃபேஸ்புக் பணியாளர்கள்

முகநூல் நிறுவனத்தின் வழங்கிகளில் (சர்வர்) லட்சக்கணக்கான பயனர்களின் கடவுச் சொற்கள் வாசிக்கக்கூடிய விதத்தில் சாதாரண எழுத்துகளில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தன் அறிக்கையில் கூறியுள்ளது.

சமூக ஊடகங்கள் தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பானவையா என்ற கேள்வி எப்போதும் இருந்து வரும் ஒன்று.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம், முகநூல் பயனர்களின் தகவல்களை அவர்களுக்குத் தெரியாமலே பயன்படுத்திய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஃபேஸ்புக் பயனர்கள் 60 லட்சம் பேரின் பாஸ்வேர்டு எனப்படும் கடவுச் சொற்கள், சங்கேத குறியீடுகளாக கூட அல்லாமல் யாரும் வாசிக்கக்கூடிய சாதாரண எழுத்துகளாய் ஃபேஸ்புக் சர்வர்களில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக கிரெப்சன் என்ற பாதுகாப்பு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான பாதுகாப்பு கண்காணிப்பின்போது இது தெரியவந்துள்ளது. இருபதாயிரம் ஃபேஸ்புக் பணியாளர்கள் பார்க்கக்கூடிய விதத்தில் இக்கடவுச் சொற்கள் சேமிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

2012ம் ஆண்டிலிருந்து இவை சேமிக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, "வெளிநபர் யாரும் அந்தக் கடவுச்சொற்களை பார்க்க இயலாது.

ஃபேஸ்புக் ஊழியர்களும் அதை தவறான விதத்தில் பயன்படுத்த இயலாது. இந்தக் குறைபாடு நீக்கப்பட்டு விட்டது. வழங்கியில் சேமிக்கப்பட்டிருந்த கடவுச்சொற்களுக்குரிய பயனர்கள் அத்தனை பேருக்கும் தகவல் அனுப்பப்படும்," என்று ஃபேஸ்புக் நிறுவனம் பதில் கூறியுள்ளது.

More News >>