முதல் போட்டியிலேயே சிறப்பான சம்பவம் செய்த ஸ்பின்னர்கள் - சென்னைக்கு 71 ரன்கள் இலக்கு

12-வது ஐபிஎல் சீசன் தொடக்கம், டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்கியுள்ளன.

முதலாவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனால் தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சென்னை அணி ட்ரெண்ட் ஆகி வந்தது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே போட்டி இன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பௌலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடங்கியது.

ஆரம்பம் முதலே ஆர்.சி.பி. வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் ஹர்பஜன் சிங். கோலி, டிவில்லியர்ஸ் முக்கிய தலைகள் 3 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்த, அந்த அணி தடுமாறியது. அடுத்து பௌலிங் போட்ட இம்ரான் தாஹீர், ஜடேஜா உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் ஆர்சிபிவீரர்களை வெளியேற்றினர். இறுதியில் 17.1 ஓவர்களுக்கு 70 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

சென்னை அணி தரப்பில், ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். ஆர்சிபியை பொறுத்தவரை  பார்தீவ் படேல் கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார். அவர் தான் அந்த அணியில் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார்.

More News >>