அசத்தலான ருசியில் ஆலு பராத்தா ரெசிபி

உருளைக்கிழங்கு ஸ்டப் செய்த ஆலு பராத்தா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசித்த உருளைக்கிழங்கு - 3

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

கொத்துமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சோதுமை மாவு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய், உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடம் ஊறவிடவும்.

ஒரு வாணலியில், 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சிப் பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள், எலுமிச்சை சாறு, மசித்த உருளைக்கிழங்கு, கொத்துமல்லி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி தனியா எடுத்து வைக்கவும்.

உருளைக்கிழங்கு மசாலா ஆறியதும், கோதுமை மாவை உருட்டிக் கொள்ளவும். அதே அளவிற்கு உருளைக்கிழங்கு மசாலாவையும் எடுத்துக் கொள்ளவும்.

கோதுமை மாவை சப்பாத்தி போன்று உருட்டி விரித்து அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதைச் சுற்றி மாவை மூடி, மீண்டும் அதனை உருட்டி விரிக்கவும்.

பின்னர், இதனை தவாவில் சப்பாத்திப் போன்று சுட்டு எடுக்கவும்.அவ்ளோதாங்க.. சுவையான ஆலு பராத்தா ரெடி..!

More News >>