ஹெல்தி முருங்கைக்கீரை சூப் ரெசிபி

உடலுக்கு மிகவும் சத்து தரும் முருங்கைக்கீரை ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை இலை - ஒரு கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

மிளகு - 1 டீஸ்பூன்

பட்டை - துண்டு

ஏலக்காய் - 2

சோம்பு - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

வேகவைத்து மசித்த துவரம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

உப்ப - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில், எண்ணெய்விட்டு காய்ந்ததும், சோம்பு, சீரகம், பட்டை, ஏலக்காய் போட்டு வதக்கவும்.

பிறகு, நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

அத்துடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர், மஞ்சள் தூள், முருங்கைக்கீரை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

துவரம் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி மூடிப்போட்டு 2 விசில்விடவும்.

இறுதியாக, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி 2 நிமிடம் கொதிக்க வைத்து பின்னர் வடிக்கட்டி அரை டீஸ்பூன் நேய் சேர்த்து கலக்கி பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான முருங்கைக்கீரை சூப் ரெடி..!

More News >>