திருமாவளவனுக்கு பொருளாதார நெருக்கடியாம்..! நன்கொடை கேட்டு தொண்டர்களுக்கு கடிதம்
மக்களவை தேர்தல் செலவுக்கு பெரும் நெருக்கடியாக உள்ளதால், நன்கொடை வழங்கி உதவுங்கள் என்று கட்சித் தொண்டர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதி சார்பாக திருமாவளவன் தனிச் சின்னத்திலும், விழுப்புரத்தில் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னம் சார்பில் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாகக் கூறி பண உதவி கேட்டு தொண்டர்களுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் களம் என்பது எத்தகைய சவாலானது என்பது தெரிந்ததே. அதில் முக்கியமானது பொருளாதார சிக்கல். அதனை நிவர்த்தி செய்ய தங்களால் இயன்ற நிதி உதவியை அளியுங்கள் என்று கட்சியின் வங்கிக் கணக்கையும் குறிப்பிட்டு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்