இந்துமத சிறுமிகள் மதமாற்றமாசூடுபிடிக்கும் பாகிஸ்தான் விவகாரம்
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை இஸ்லாமிய கும்பல் கடத்திச் சென்று மதமாற்றம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
ஹோலி பண்டிகை நடந்த போது, சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கி மாவட்டத்தைச் சேர்ந்த ரவீணா (13) மற்றும் ரீனா (15) ஆகியோரை இஸ்லாமிய கும்பல் ஒன்று கடத்தியுள்ளது. சிறுமிகளை கடத்திய அக்கும்பல், அவர்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டதாகவும், கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக சிறுமிகளின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் இந்து சேவா அமைப்புத் தலைவர் சஞ்ஜேஷ் தான்ஜா, அந்நாட்டு பிரதமர் இம்ரானிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு, பாக்.,-கில் சிறுபான்மையினராக உள்ள இந்துகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையில், மதமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிறுமிகள், சுய விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, உரிய விளக்கமளிக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.