விஜயகாந்த் நிச்சயம் வருவார் அடித்துச் சொல்லும்nbspபிரேமலதா
தேர்தலில், அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகள் தேமுதிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சி வேட்பாளர் மற்றும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக திமுக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, சேலம், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தேமுதிகவின் துணை பொதுச் செயலாளர் சுதீஷை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், தேமுதிகவின் தொண்டர்கள் விஜயகாந்த் பிரச்சார வருகையை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றனர்.
இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தூத்துக்குடி தொகுதியில் 2 பெண்கள் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. மிகவும் ஆரோக்கியமான ஒன்று. அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும். தமிழகத்திற்குத் தேவையான திட்டங்கள் பற்றி மத்திய அரசிடம் அழுத்தமாக எடுத்துரைப்போம் என்ற அவர், தேர்தல் பரப்புரைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதியாக வருவார் என்றார். முன்னதாக, விஜயகாந்த் சைலன்ட் பிரச்சாரம் செய்வார் என சுதீஷ் தெரிவித்திருந்தார்.