`நார்வேயில் நடுக்கடலில் தவிக்கும் பயணிகள் - உயிர் சேதமின்றி மீட்கப்படுவார்களா?

நார்வே கடல் பகுதியில் என்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் தவித்த 1,300 பயணிகள் அவசர கால விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

வைகிங் ஸ்கை என்ற பெயர் கொண்ட சொகுசுக் கப்பல் 1300 பயணிகளுடன் நார்வேயில் இருந்து புறப்பட்டது. அந்த கப்பல் புறப்பட்ட இடத்திலிருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது தீடீரென வீசிய சூறாவளிக் காற்றிலும், பேரலையிலும் சிக்கி தள்ளாடியது. மோசமான வானிலை மற்றும் இயந்திர கோளாறுக் காரணமாக புயலில் சிக்கிக் கொண்ட அந்த கப்பல் தெற்கு நார்வே கடல்பகுதியில் நிறுத்தப்பட்டது.

கப்பலின் என்ஜின் பழுதானதால் கப்பலில் இருந்தவர்களின் உயிருக்கு ஆபத்து நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், அதில் பயணித்த 1,300 பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். நடுக்கடலில் தத்தளிக்கும் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

More News >>