நித்தியானந்தாவை கைது செய்ய வாய்ப்பு நீதிமன்றம் எச்சரிக்கை

பிப்ரவரி 2க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வில்லை எனில் நித்தியானந்தாவை கைது செய்ய நேரிடும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜெகதலபிரதாபன் என்பவர் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய நிரந்தரத் தடை கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ‘நித்யானந்தா சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். நித்யானந்தா நியமனத்தை ரத்துசெய்யக்கோரிய வழக்கில் ஆதீனமாக நியமனம் செய்வதற்குத் தகுதியுடையவர் அல்ல என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நித்யானந்தா மடத்துக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், ஆதீன மடத்துக்குள் செல்வது தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளார். நித்யானந்தா மடத்துக்குள் நுழைய நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய இடைக்காலத்தடையும், போலி ஆவணங்கள் தயார் செய்தது தொடர்பாக தலைமைச் செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை, மதுரை ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கு விசாரணையை நான்கு வார காலத்துக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், நித்யானந்தா தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் நித்தியானந்தா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவில்லை.

இதைத்தொடர்ந்து நீதிபதி மகாதேவன் நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நித்தியானந்தா தரப்பு வழக்கறிஞர் மேலும் ஒருமுறை பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஆசிரமங்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. நித்தியானந்தா ஆசிரமங்கள் அழிவு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. பிப்ரவரி 2க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வில்லை எனில் நித்தியானந்தாவை கைது செய்ய நேரிடும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

More News >>