மக்களவைத் தேர்தலில் கமல் போட்டியிடவில்லை இறுதி பட்டியல் வெளியீடு nbsp
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.
கோவை, கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். கமலின் சொந்த தொகுதியான ராமநாதபுரத்தில் கமல் போட்டியிட வேண்டும் எனக் கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை.
வேட்பாளர்கள் பட்டியல்:
தென்காசி – முனீஸ்வரன்
திருப்பூர் - சந்திரகுமார்
பெரம்பலூர் - அருள்பிரகாசம்
நாமக்கல் - ஆர்.தங்கவேலு
ஈரோடு - சரவணக்குமார்
ராமநாதபுரம் - விஜயபாஸ்கர்
கரூர் - ஹரிஹரன்
சிவகங்கை- சினேகன்
கோவை- மகேந்திரன்
காஞ்சிபுரம் - எம்.தங்கராஜ்
திருவண்ணாமலை - அருள்
ஆரணி - வி.ஷாஜி
கள்ளக்குறிச்சி - கணேஷ்
தென்சென்னை – ரங்கராஜன்
மதுரை - அழகர்
தஞ்சை - ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ்
கடலூர் - அண்ணாமலை