நான் நேர்மையான நடிகன்...நீங்கள் யார்...-ஸ்டாலினை தாக்கிய கமல்nbsp
மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவை தேர்தலில் கமல் போட்டியிடவில்லை.
கோவை, கொடிசியா மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. கூட்டத்தில் பேசிய கமல், திமுக தலைவர் ஸ்டாலின் அவரை கடுமையாக விமர்சித்து பேசினார்.
‘நடிகர் தானே என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார், நான் நடிகன். நீங்கள் யார் என்று கேட்டால் அப்பாவின் மகன் என்பீர்கள், நான் நேர்மையான நடிகன், வருமான வரியை பாக்கி இல்லாமல் கட்டுபவன் என ஸ்டாலினை விமர்சித்து பேசிய அவர், ஆளும் அதிமுகவையும் மத்திய அரசின் மீது பல குற்றச்சாட்டு கேள்விகளை முன்வைத்தார்.
மேலும், என்னை ஒரு நல்ல அரசியல்வாதி என கூறும் நாள் வரும் எனவும் கூட்டத்தில் பேசினார்.