குடிசை இல்லா தமிழகம்...50nbspலட்சம் பேருக்கு வேலை...மக்கள் நீதி மய்யம் கட்சியின் டாப்nbsp10 அறிக்கை

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிவித்த  அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார்.

அறிக்கையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:

5 ஆண்டுகளுக்குச் சுத்தமான குடிநீர் வசதி

5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.

500 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 60 லட்சம் பேரின் வறுமை அகற்றுவோம் குடிசை இல்லா தமிழகம் காண்போம்

தமிழகத்தின் மொத்த பொருளாதார ஆதாரமான விவசாயம், தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும்

விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் பணியாற்றும் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் ஊதியம்.

உலகம் பரவியுள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளைக் காப்போம்

சுங்க வரி கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.

ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே கொண்டு வரப்படும்.

 

இலவச வைபை வழங்கும் திட்டம்

More News >>