சொடக்கு மேல சொடக்கு போடுது பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நீதிமன்றம் உத்தரவு
தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் வரும் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் உள்ள சொடக்கு மேல சொடக்கு பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த பாடலில் “விரட்டி விரட்டி வெளுக்க தோணுது என்று அதிகார திமிர” என்ற வரிகளை நீக்க கோரி அதிமுக பிரமுகர் சதீஷ் குமார் வழக்கு தொடர்ந்தார்.
அதில், அரசியல்வாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நோக்குடன் பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளதால் இதன்மூலம் பிரச்சனை ஏற்படாத வகையில் தடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையின்போது சொடக்கு பாடலின் வரிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.